ஆப்நகரம்

ஆசிரியர் அடித்ததால் வருந்திய மாணவன்; காய்ச்சலுடன், மன அழுத்தம் உச்சக்கட்டமாகி உயிரிழந்த சோகம்!

ஆசிரியர் அடித்த சம்பவத்தை தொடர்ந்து, மன அழுத்தம் மிகுதியாகி மாணவன் மரணமடைந்துள்ளான்.

TNN 5 Dec 2017, 1:01 pm
கோடா: ஆசிரியர் அடித்த சம்பவத்தை தொடர்ந்து, மன அழுத்தம் மிகுதியாகி மாணவன் மரணமடைந்துள்ளான்.
Samayam Tamil 12 year old kota boy beaten by teacher dies of depression
ஆசிரியர் அடித்ததால் வருந்திய மாணவன்; காய்ச்சலுடன், மன அழுத்தம் உச்சக்கட்டமாகி உயிரிழந்த சோகம்!


ராஜஸ்தான் மாநிலம் கோடா அருகே ரங்பாடி பகுதியில் உள்ள ஜோதிபா மேல்நிலைப்பள்ளியில் மோகன்(12) என்ற மாணவன் படித்து வந்தார். இந்நிலையில் வீட்டுப் பாடம் செய்யாததால், பள்ளி ஆசிரியர் மோகனை தண்டித்துள்ளனர்.

இதையடுத்து காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் மனதளவில் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளார். நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக சென்றுள்ளது.

இந்த சூழலில் கடந்த ஞாயிறு அன்று, சிகிச்சை பலனின்றி மோகன் இறந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த பள்ளி இயக்குநர் சுமன், மாணவர்களிடம் ஒழுங்கை ஏற்படுத்த மென்மையான கண்டிப்பும், லேசான அடியும் கட்டாயம் தேவை என்றார்.

பள்ளிக்கு எதிராக செயல்படும் குழுவினருடன் இணைந்து, மாணவனின் பெற்றோர் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை பள்ளி மீது கூறுவதாக தெரிவித்தார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் சுமன், கடந்த ஜூலை 2017 முதல் அப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

அவர் மீது எந்தவித குறைபாடுகளும் கண்டதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மஹாவீர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவதற்காக காத்திருப்பதாகவும், விசாரணை தொடர்ந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

12-year-old Kota boy beaten by teacher dies of ‘depression’.

அடுத்த செய்தி