ஆப்நகரம்

வாலயூர்: சாலையோர வியாபாரிகளிடம் இருந்து 25 ரோஸ் நிற கிளிகள் பறிமுதல்

அரிதாகி வரும் ரோஸ் நிற கிளிகளை, சாலையோர வியாபாரிகளிடம் இருந்து வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

TNN 15 Sep 2016, 12:59 am
கோவை: அரிதாகி வரும் ரோஸ் நிற கிளிகளை, சாலையோர வியாபாரிகளிடம் இருந்து வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil 25 rose ringed parakeets rescued from roadside vendors at walayar
வாலயூர்: சாலையோர வியாபாரிகளிடம் இருந்து 25 ரோஸ் நிற கிளிகள் பறிமுதல்


வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் 4வது பிரிவின் படி, ரோஸ் நிற கிளிகள் அரிதாகி வரும் இனமாகும். இதனால் அவற்றை காக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டம் வாலயூரில் விலங்குகள் நல ஆர்வலர் சரத்குமார் உட்பட அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையோரத்தில் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் ரோஸ் நிற கிளிகளை விற்றுக் கொண்டிருந்ததை கண்டனர். அங்கு சென்ற அவர்கள், வாடிக்கையாளர்கள் போல் விசாரித்தனர். அவர்களிடமிருந்து அனைத்து தகவல்களையும் பெற்ற பின்னர், வனத்துறை அதிகாரிகளுக்கு சிக்னல் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து, 25 ரோஸ் நிற கிளிகளை பறிமுதல் செய்தனர். இதில் 4 ஆண் கிளிகள், 13 பெண் கிளிகளும், 8 சிறிய கிளிகளும் இருந்தன. அனைத்து கிளிகளிடத்தில் இருந்தும், முதன்மை இறகுகள் நீக்கப்பட்டிருந்தன. அவை ஒரு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் மூவரையும் கைது செய்து, தலா ரூ.500 அபராதமாக வசூலித்தனர். இவர்களுக்கு பின்னால் உள்ள முதலாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் கூறினர்.

அடுத்த செய்தி