ஆப்நகரம்

சவுதியில் ஆண்நண்பா்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 6 பெண்களின் தலையை வெட்ட உத்தரவு

சவுதி அரேபியாவில் ஆண் நண்பா்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளுக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் தலையிட்டு தண்டனைச் செயல்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று உலகம் முழுவதிலும் ஆதரவு குரல்கள் எழுந்து வருகின்றன.

TOI Contributor 31 Oct 2017, 6:27 pm
சவுதி அரேபியாவில் ஆண் நண்பா்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளுக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் தலையிட்டு தண்டனைச் செயல்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று உலகம் முழுவதிலும் ஆதரவு குரல்கள் எழுந்து வருகின்றன.
Samayam Tamil 6 school girls to be beheaded for indecency
சவுதியில் ஆண்நண்பா்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 6 பெண்களின் தலையை வெட்ட உத்தரவு

பாத்திமா அல் குவைனியின் பிறந்த நாளை அவரது தோழிகள் மூன்று ஆண் நண்பா்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளனா். இது தொடா்பாக பாத்திமாவின் பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் சவுதி அரேபியாவின் காவல் துறையில் புகாா் தொிவித்துள்ளாா். காவலா்கள் அங்கு வந்தபோது தங்களது ஆண் நண்பா்களுடன் சோ்ந்து இவா்கள் நடனமாடிக் கொண்டிருந்துள்ளனா். உடனடியாக அனைவரையும் கைது செய்த காவல்துறையினா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

ஒரு வருடத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த விசாரணையில் பெண்கள் தங்களது தவறை ஒப்புக் கொள்ளாததால் மரண தண்டனையை நிறைவேற்ற ஆண்கள் மட்டும் ஷாியா குழு தீா்ப்பு வழங்கியது. மேலும், கைது செய்யப்பட்ட மூன்று ஆண் நண்பா்களுக்கும் எச்சாிக்கை மற்றும் ஆலோசனைகள் வழங்கி விடுதலை செய்துள்ளது அந்த விசாரணைக் குழு.

மிக மோசமான மனித உாிமை மீறலான இதற்கு எதிா்ப்புத் தொிவித்து ஐக்கிய நாடுகள் சபையும், பெண்கள் உாிமை ஆணைக்குழுவும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. சவுதி அரேபியா கடுமையான இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றும் ஒரு நாடு. மரண தண்டனை அறிவிக்கப்பட்ட நபாின் தலையை மக்கள் பாா்க்கும் வகையில் பொது இடத்தில் வெட்டுவதே அந்த நாட்டின் வழக்கம். தலை வெட்டப்பட்ட சடலத்தை ஊாின் மத்தியில் தொங்கவிட்டு காட்சிப்படுத்தவும் செய்வா்.

அடுத்த செய்தி