ஆப்நகரம்

அண்டார்டிகா பனித்தட்டு விரிசலால் காத்திருக்கும் ஆபத்து!!

அமெரிக்காவில் மான்ஹாட்டன் நகரை விட 100 மடங்கு பெரிய பனித்தட்டு ஒன்று பிளவுபட்டு அண்டார்டிகா கடல் பகுதியின் நீர் மட்டத்தை சுமார் 4 அடி உயரத்திற்கு எதிர்காலத்தில் உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 7 Jan 2017, 3:09 pm
அமெரிக்காவில் மான்ஹாட்டன் நகரை விட 100 மடங்கு பெரிய பனித்தட்டு ஒன்று பிளவுபட்டு அண்டார்டிகா கடல் பகுதியின் நீர் மட்டத்தை சுமார் 4 அடி உயரத்திற்கு எதிர்காலத்தில் உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil a massive ice block is poised to break off antarcticas larsen c ice shelf scientists
அண்டார்டிகா பனித்தட்டு விரிசலால் காத்திருக்கும் ஆபத்து!!


இந்த பனித்தட்டில் ஏற்பட்டு இருந்த விரிசல் தற்போது 11 மைல் தூர தடிமனுக்கு, கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. கடந்த 2011ல், 50 மீட்டர் அளவு தடிமனுக்கு ஏற்பட்டு இருந்த விரிசல் தற்போது 500 மீட்டர்களாக அதிகரித்துள்ளது. இந்தப் பிளவு விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதுமட்டுமின்றி, தீபகற்ப பனிப்பாறைகளும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பெரிய, பெரிய பனிப்பாறைகள் கரை ஒதுங்கி வருவதும் கவலை அளிப்பதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

தற்போது விரிசலை ஏற்படுத்தி இருக்கும் பனித்தட்டு மேற்கு அண்டார்டிகா பகுதியில் அமைந்துள்ளது. இந்த பனித்தட்டு தன்னகத்தே உறைந்த நீரை வைத்துள்ளது. இந்த பனித்தட்டு எதிர்காலத்தில் உருகும்பட்சத்தில் அல்லது பல சிறு பனிப்பாறைகளாக விலகும்பட்சத்தில் அண்டார்டிகா கடல் நீர் மட்டம் சுமார் 4 அடிகளுக்கு அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகின் மாறுபட்ட சீதோஷண சூழலால், அதிகரித்துள்ள தட்பவெப்பத்தின் காரணமாக கடலிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் அதிகரித்து இருப்பதால், கடலிலும் மாற்றம் ஏற்பட்டு பனித்தட்டுக்கள் உருகுவது, பனிப்பாறைகள் உருகுவது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி