ஆப்நகரம்

போலீஸ் கைதுசெய்த அணில், பெயிலில் தப்பித்து ஓடிய விநோதம்!

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில், கிறிஸ்துமஸ் மரத்திலிருந்த விளக்குகளை சேதமாக்கிய அணிலை போலீஸார் கைது செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது

TNN 6 Dec 2017, 1:59 am
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில், கிறிஸ்துமஸ் மரத்திலிருந்த விளக்குகளை சேதமாக்கிய அணிலை போலீஸார் கைது செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil a squirrel got arrested for damaging a christmas tree lights in new jersey
போலீஸ் கைதுசெய்த அணில், பெயிலில் தப்பித்து ஓடிய விநோதம்!


அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள சீ கிர்ட் என்ற இடத்தில், ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அங்கு ஒரு பெரிய கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு அதில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டன.

இந்த விளக்குகளை அணில் ஒன்று தொடர்ந்து சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால பல விளக்குகள் எரியவில்லை. இதனையடுத்து, சீ கிரிட் போலீஸார் அந்த அணிலைப் போராடி பிடித்தனர்.

கைது செய்த அந்த அணிலானது, கைதான சில நிமிடங்களில் பெயில் தப்பித்து ஓடி விட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வினோதமான இந்தச் சம்பவத்தை அனைவரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி