ஆப்நகரம்

நீச்சலடித்து பள்ளிக்கு சென்று பாடம் எடுக்கும் ஆசிரியர்

கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தினமும் நீச்சலடித்து ஆற்றை கடந்து பள்ளி சென்று பாடம் நடத்தி வருகின்றார்.

TNN 10 Mar 2017, 3:19 pm
மலப்புரம் : கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தினமும் நீச்சலடித்து ஆற்றை கடந்து பள்ளி சென்று பாடம் நடத்தி வருகின்றார்.
Samayam Tamil a teacher who swims through a river everyday to get to his students
நீச்சலடித்து பள்ளிக்கு சென்று பாடம் எடுக்கும் ஆசிரியர்


கேரளாவின், மனப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசிரியர் அப்துல் மாலிக். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிக்கு கழுத்தளவு தண்ணீரை நீச்சலடித்து கடந்து சென்று பாடம் நடத்தி வருகின்றார்.

இவர் ஆற்றை கடக்க நீச்சலடிக்காமல் சாலை வழியாக பேருந்தில் சென்றால் 12 கிமீ சுற்றி பள்ளிக்கு செல்ல வேணியிருக்கும் என்பதால், பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லையாம். இதனால் அவர் தினமும் ஒரு ரப்பர் டியூபை இருப்பில் மாட்டிக்கொண்டு, தன் டிபன் பாக்ஸ், ஷூ ஆகியவற்றை கையில் மேலே தூக்கி பிடித்த வண்ணம் நீச்சலடித்து பள்ளியை அடைகிறாராம்.



பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்லவேண்டும் என்பதற்காகவே இப்படி செல்ல வேண்டியிருப்பதாகவும், இது சுலபமாக இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

அப்துல் மாலிக்கின் 20 ஆண்டுகால கல்வி அர்பணிப்பை பாராட்டி லண்டனை சேர்ந்த ஒரு டாக்டர் அவருக்கு ஒரு படகை பரிசளித்துள்ளார். இப்போதெல்லாம் ஆசிரியர் அந்த படகில் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்கிறாராம்.

அடுத்த செய்தி