ஆப்நகரம்

கொள்ளை லாபம் ஈட்டும் ஆதார் சேவை - வேண்டுமென்றே பிழையோடு ஆதார் கொடுக்கப்படுகிறதா?

வங்கி சேவை, அரசு வழங்கும் சேவைகள் என அனைத்திற்கும் ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கி வருகின்றது.

Samayam Tamil 20 May 2018, 10:40 am
வங்கி சேவை, அரசு வழங்கும் சேவைகள் என அனைத்திற்கும் ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கி வருகின்றது.
Samayam Tamil Aadhaar-card


அனைத்து வகையான அரசு சேவைகள் பெற ஆதார் அட்டை எண் அவசியம், அதில் இடம் பெற்றுள்ள விபரம் தங்களின் கோப்புகளுடன் ஒத்திருக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.

அப்படி இருக்க, ஆதார் அட்டை கொடுக்கப்படும் போது பலரின் ஆதார் அட்டையில் பல்வேறு எழுத்து பிழை இருக்கிறது. அப்படி பிழையோடு இருக்கும் ஆதார் அட்டையை திருத்தி வரும்படி கூறப்படுகிறது.

கொள்ளை லாபம்:
ஆதார் அட்டை பிழைகளை திருத்தம் செய்ய பல்வேறு இடங்களில் இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. ஆதார் அட்டை பெற இலவசம் என கூறும் இந்த சேவை மையங்கள், அதில் உள்ள பிழைகளை திருத்த ரூ. 30 முதல் 50 வரை குறைந்த பட்சம் கேட்கின்றன.

நன்கு படித்தவர்கள் கூட ஆதார் அட்டை எடுக்கும் போது, அதை வழங்கும் நபர்களின் விரட்டலால், பிழையை சரியாக கவனிக்க முடியாத நிலை தான் உள்ளது. அப்படி இருக்க படிப்பறிவில்லாத மக்கள் அதை சரி பார்ப்பது சிரமமாகிறது. அப்படிப்பட்ட சூழலில் அவர்களின் ஆதார் அட்டையில் பிழை ஏற்படுகிறது.

ஒவ்வொருவரும் தங்களின் ஆதார் விபர்ங்களை திருத்த ரூ. 50 கொடுக்க வேண்டியுள்ளதால் அந்த இ சேவை மையங்கள் கொள்ளை லாபாம் அடைகின்றன.

வடசென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி