ஆப்நகரம்

ஆம்புலன்ஸ் சேவைக்கும் இனி ஆதார் தேவை... உண்மையில் சிறப்பான திட்டம்

இந்தியாவில் தற்போது எதற்கெடுத்தாலும் ஆதார் கார்டு தேவை என மத்திய அரசு அறிவித்து வருகின்றது. இந்த வகையில் தற்போது உத்தரப் பிரதேசத்தில், ஆம்புலன்ஸ் சேவை பெறுவதர்கும் ஆதார் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 20 Jun 2017, 4:03 pm
இந்தியாவில் தற்போது எதற்கெடுத்தாலும் ஆதார் கார்டு தேவை என மத்திய அரசு அறிவித்து வருகின்றது. இந்த வகையில் தற்போது உத்தரப் பிரதேசத்தில், ஆம்புலன்ஸ் சேவை பெறுவதர்கும் ஆதார் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil aadhaar may soon be compulsory in uttar pradesh for booking ambulance
ஆம்புலன்ஸ் சேவைக்கும் இனி ஆதார் தேவை... உண்மையில் சிறப்பான திட்டம்

உத்தரப் பிரதேசத்தில், ஆதித்யாநாத் தலைமையிலான பாஜக அரசு நடைப்பெற்று வருகின்றது. இங்கு மற்ற சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியம் என மத்திய அரசு கூறிவருவது போல, ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆதார் அவசியம் என அறிவித்துள்ளார்.

சிறப்பான திட்டம்:
உத்தரப் பிரதேசம் மட்டுமில்லாமல், வட இந்தியாவின் பல மாநிலங்களில் ஆம்புலான்ஸ் சேவை வழங்கப்பட மறுப்பதால், பல இடங்களில் இறந்த உடல்கள் தோளில் சுமந்தும், சைக்கிளில் எடுத்து செல்லும் அவல நிலை நீடிக்கின்றது. இது இனியும் தொடரக் கூடாது என்பதற்காக ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆதார் அட்டை அவசியம் என அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம், சில ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் எரிபொருள் தீர்ந்து விடும் என்பதற்காக சேவை அளிக்க மறுக்கின்றனர். அதே போல ஆம்புலன்ஸ் சேவை அளிக்கும் போது எரிபொருளுக்காக காசு கேட்பதால், அதை கொடுக்க இயலாதவர்களுக்கு சேவை மறுக்கப்படுவதாக புகார் எழுந்து வருகின்றது.
இந்த பிரச்னையை தீர்க்கும் பொருட்டு இனி ஆம்புலன்ஸ் சேவை கேட்பவர்கள் ஆதார் எண் கொடுக்கவேண்டும், அப்படி பதியப்பட்ட தொலைப்பேசி அழைப்புக்கு அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சேவை அளிக்காத பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க உ.பி அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி