ஆப்நகரம்

பிறந்தவுடன் குழந்தைக்கு ஆதார் - மகாராஷ்டிராவில் அறிமுகம்

மகாராஷ்டிராவில் குழந்தை பிறந்தவுடன் ஆதார் கார்டு வழங்கும் திட்டம், சோதனை அடிப்படையில் இரண்டு மருத்துவமனைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TNN 15 Apr 2017, 12:43 pm
மகாராஷ்டிராவில் குழந்தை பிறந்தவுடன் ஆதார் கார்டு வழங்கும் திட்டம், சோதனை அடிப்படையில் இரண்டு மருத்துவமனைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil aadhar id for infant maharashtra govt introduced
பிறந்தவுடன் குழந்தைக்கு ஆதார் - மகாராஷ்டிராவில் அறிமுகம்


மகாராஷ்டிரா அரசு அனைவருக்கும் ஆதார் கார்டு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதோடு பிறக்கும் குழந்தைக்கும் ஆதார் கார்டு வழங்கும் நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக நாக்பூரில் உள்ள தாகா நினைவு பெண்கள் மருத்துவமனை மற்றும் உஸ்மனாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு உடனே ஆதார் கார்டு வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தை மருத்துவமனையை விட்டு வெளியில் செல்லும் போது ஆதார் கார்டுடன் செல்லும். நாக்பூர் மருத்துவமனையில் இதுவரை 20 குழந்தைகளுக்கு ஆதார் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆதார் கார்டு பெற்றோரின் ஆதார் கார்டுடன் இணைக்கப்படும்.
குழந்தையின் கைரேகைக்கு பதில் குழந்தையின் தாய் கைரேகை எடுக்கப்படும். குழந்தையின் பெயர் குறிப்பிடப்பட வேண்டிய இடத்தில் பெற்றோரின் பெயரை குறிப்பிட்டு அவர்களது குழந்தை என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அடுத்த செய்தி