ஆப்நகரம்

ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு மரியாதை செலுத்திய உத்தரகாண்ட் அரசு!

ஆசிட் தாக்குதால் பாதிக்கப்பட்ட பெண் உத்தரகாண்ட் மாநிலத்தின் அடையாளமாகவும், பெண்கள் முன்னேற்ற தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது.

Samayam Tamil 8 Mar 2018, 2:32 pm
ஆசிட் தாக்குதால் பாதிக்கப்பட்ட பெண் உத்தரகாண்ட் மாநிலத்தின் அடையாளமாகவும், பெண்கள் முன்னேற்ற தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது.
Samayam Tamil acid attack survivor kavita bisht is brand ambassador for women empowerment in uttarakhand
ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு மரியாதை செலுத்திய உத்தரகாண்ட் அரசு!

ஆசிட் தாக்குதலில் இருந்து மீண்டு வந்து, அனைவருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கவிதா பிஷ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இவர் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானதில் இவரது பார்வை பறிபோனது. அதன் பிறகு மனதளவிலும், உடலளவிலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, இயலாதவர்களுக்கு தன்னால் ஆன உதவிய செய்துகொண்டும் வாழ்ந்து வருகிறார். இசைக்கருவிகளை வாசிப்பதை தனது பொழுதிபோக்காகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவரை உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் முன்னேற்ற தூதுவராகவும், உத்தரகாண்ட் மாநிலத்தின் அடையாளமாகவும் மாநில அரசு இவரை நியமித்துள்ளது. ஆசிட் தாக்குதால் பாதிக்கப்பட்டு மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து வரும் கவிதா பிஷ்க்கு தற்போது சமூக ஆர்வலர்களிடமிருந்தும், பெண்களிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

அடுத்த செய்தி