ஆப்நகரம்

வீடியோ: பேய் மீது காரை ஏற்றிய சூரியின் திகில் அனுபவம்

நடிகர் சூரி நேருக்கு நேர் பேயை சந்தித்த தன் அனுபவத்தை வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

TNN 18 Aug 2016, 6:30 pm
நடிகர் சூரி நேருக்கு நேர் பேயை சந்தித்த தன் அனுபவத்தை வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Samayam Tamil actor soori shares his real ghost encounter experience on coimbatore palani highway
வீடியோ: பேய் மீது காரை ஏற்றிய சூரியின் திகில் அனுபவம்


நகைச்சுவை நடிகர் புரோட்டா சூரி விழாயக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கோவை-பழனி நெடுஞ்சாலையில் காரில் சென்றுள்ளார். அப்போது, சாலையின் நடுவில் ஒரு உருவம் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தன் ஓட்டுனரிடம் விளக்குகளை அணைத்துவிட்டு காரை அந்த உருவத்தின் மேல் மோதச் சொல்லியுள்ளார்.

அதன்படியே, ஓட்டுனரும் பேய் போன்ற உருவத்தின் மீது காரை ஏற்ற முற்பட்டிருக்கிறார். அப்போது, காலை பலமாக தாக்குவது போன்ற சத்தம் மட்டும் கேட்கிறது. காரில் விளக்கு அணைக்கப்பட்டிருந்ததால் என்ன நடந்தது என்று வீடியோவில் தெளிவாகத் தெரியவில்லை.

ஒரு நிமிடம் நீடிக்கும் இந்த வீடியோ காட்சி சூரியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி