ஆப்நகரம்

மனித உயிரை காவு வாங்க காத்திருக்கும் காற்று மாசுபாடு : 2030ல் உயிர் பலி அதிகரிக்கும்

வரும் 2030ம் ஆண்டுக்குள் காற்று மாசுபாடு காரணமக உலகளவில் 60,000க்கும் அதிகமானோரின் உயிர் பறிபோக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

TNN 2 Aug 2017, 12:36 pm
வாசிங்டன் : வரும் 2030ம் ஆண்டுக்குள் காற்று மாசுபாடு காரணமக உலகளவில் 60,000க்கும் அதிகமானோரின் உயிர் பறிபோக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil air pollution may kill 60000 people by 2030
மனித உயிரை காவு வாங்க காத்திருக்கும் காற்று மாசுபாடு : 2030ல் உயிர் பலி அதிகரிக்கும்


அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகம் செய்த ஆராய்ச்சியில் இந்த அதிர்ச்சியான முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால் பல்வேறு ஆபத்து ஏற்பட உள்ளது. இந்த வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகளின் கரைதல் அதிகரித்து வருகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் மரங்கள் வெட்டப்பட்டு வருவதால், காற்றில் மாசு பாடு அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் சுவாசிக்கும் காற்று தரமற்றதாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வரும் 2030ம் ஆண்டிற்குள், காற்று மாசுபாடு காரணமாக 60,000க்கும் மேற்பட்டோரும், இந்த நூற்றாண்டில் 2,60,000ம் பேர் வரை தங்கள் உயிரை சராசரியை விட முன்னதாக பறிபோகும் என தெரிவித்துள்ளனர்.

காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், உலக நாடுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை இப்போதே எடுப்பது அவசியம் என அந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி