ஆப்நகரம்

அம்பானி மகள் திருமணத்தில் நடனமாடிய ஐஸ்வர்யாராய்- அபிஷேக் தம்பதி ; கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள்

அம்பானியின் மகள் திருமணத்தில் நடனமாடிய ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சனின் நடன வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Samayam Tamil 12 Dec 2018, 11:35 am
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரான அம்பானியின் மகள் ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரிமான் ஆகியோரின் திருமணம் இன்று நடக்கிறது முன்னதாக அவர்களது சங்கீத் நிகழ்ச்சி கடந்த 8ம் தேதி உதய்பூரில் உள்ள ஒப்ராய் உதய் விலாஸ் என்ற இடத்தில் நடந்தது.
Samayam Tamil aishwarya


இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் இருந்து பிரபலமான பாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள், மற்றும் பெரும் வர்த்தக நிறுவன முதலாளிகள் கலந்து கொண்டனர்.

பாலிவுடன் நட்சத்திரங்களான சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, கரன் ஜோகர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பெர்பாமென்ஸ் செய்தனர். இதில் நடிகை ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் செய்த நடனம் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram Spectacular dance performance by Aishwarya Tau and Abhishek Bachchan for Ishant Ambani's pre wedding celebration #weddingdiaries #weddingsaga #bigfatindianwedding #destinationwedding #aishwaryarai #abhishekbachchan #ishaambani #indianwedding #rajasthan #udaivilas #udaipur #celebritymanagement #wedmegood #weddingplanners #nishajalorievents A post shared by FILMYACCESS (@filmyaccess) on Dec 9, 2018 at 7:09am PST

குரு படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு இவரும் நடமாடினர். இதில் ஐஸ்வர்யா ராய் நடனமாட அபிஷேக்பச்சன் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து தோள்பட்டைகளை மட்டும் அசைத்துக்கொண்டு அதை பார்த்து கொண்டே இருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பலர் அபிஷேக் பச்சனை கலாய்த்து வருகின்றனர். இது குறித்து டுவிட்டரில் சிலர் பதிவிட்ட கருத்துக்களை கீழே காணுங்கள்.

அடுத்த செய்தி