ஆப்நகரம்

வீட்டுப்பாடம் செய்யாத குழந்தையின் கையை உடைத்த ஆசிரியை!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியை ஒருவர் வீட்டுப் பாடம் செய்யாத யூகேஜி மாணவியின் கையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 26 Oct 2017, 4:22 pm
ஆந்திரா: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியை ஒருவர் வீட்டுப் பாடம் செய்யாத யூகேஜி மாணவியின் கையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil andhra teacher breaks kindergarten students arm for not doing homework
வீட்டுப்பாடம் செய்யாத குழந்தையின் கையை உடைத்த ஆசிரியை!


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேஷனல் டேலன்ட் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி உள்ளது. இதில் பூஜா பல்லவி என்ற மாணவி, யூகேஜி படித்து வருகிறார். இவர் வீட்டுப்பாடம் செய்யாததால் அவரை ஆசிரியை ஒருவர் தண்டித்துள்ளார்.

அன்று பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி வலியால் துடித்ததால், அவளது பெற்றோர் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவளது கையில் உள்ள எழும்பு உடைந்து இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

தற்போது இந்தச் சம்பவம் குறித்து மந்தல் கல்வித்துறை அதிகாரி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Andhra teacher breaks kindergarten student's arm for not doing homework

அடுத்த செய்தி