ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு போல சிறப்பு அந்தஸ்துக்காக அணி திரளும் ஆந்திரா இளைஞர்கள்: கலக்கத்தில் நாயுடு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எழுந்த புரட்சி தற்போது மற்ற மாநிலங்களிலும் பரவி வருகிறது. ஆந்திராவில் தற்போது இளைஞர்கள் அனைவரும் பேஸ்புக் இணைப்பு மூலம் தொடர்பை ஏற்படுத்தி, ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கோரி (#APdemandsspecialstatus) விசாகப்பட்டிணம் ஆர்.கே. பீச்சில் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.

TOI Contributor 25 Jan 2017, 1:40 pm
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எழுந்த புரட்சி தற்போது மற்ற மாநிலங்களிலும் பரவி வருகிறது. ஆந்திராவில் தற்போது இளைஞர்கள் அனைவரும் பேஸ்புக் இணைப்பு மூலம் தொடர்பை ஏற்படுத்தி, ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கோரி (#APdemandsspecialstatus) விசாகப்பட்டிணம் ஆர்.கே. பீச்சில் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
Samayam Tamil apdemandsspecialstatus ap youth gears to protest for special status like jallikattu
ஜல்லிக்கட்டு போல சிறப்பு அந்தஸ்துக்காக அணி திரளும் ஆந்திரா இளைஞர்கள்: கலக்கத்தில் நாயுடு


ஆந்திராவில் குறிப்பாக சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தற்போது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலம் அணி திரண்டு வருகின்றனர். கடந்த 2014ல், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான மசோதா அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் கொண்டு வரப்பட்டு, இன்னும் நிறைவேறாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக பயன்பாட்டாளர்கள் சிலர் தங்களது டுவிட்டரில், ''நாமும் தமிழகத்தைப் போல நமது மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துக்காக அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்'' என்று அழைப்பு விடுத்துள்ளனர். இதை நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் வரவேற்று, 26ஆம் தேதி குடியாரசு தினத்தன்று நீங்கள் ஆர்ப்பாட்டத்தை துவக்கினால், நாங்களும் ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம் என்று ரீடுவீட் செய்துள்ளார். பவன் டுவீட்டை பல ஆயிரக்கணக்கானவர்கள் ரீடுவீட் செய்து வருகின்றனர். தெலுங்கு நடிகர்கள் நிகில், வருண் தேஜ் ஆகியோரும் ரீடுவீட் செய்து வரவேற்றுள்ளனர்.

வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் மூலமும் இந்த தகவலை பரப்பி வருகின்றனர். 'Special status for AP" என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள பேஸ்புக் பகுதியை ஜிஐடிஏஎம் பல்கலைக்கழகம் மேலாண்மை செய்து வருகிறது.

டுவிட்டரில் ஆர்வம் செலுத்தாத ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியும், இந்த ஆர்ப்பாட்டத்தை வரவேற்றுள்ளனர். தனது டுவிட்டர் பகுதியில், நாங்களும் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றி அடையச் செய்வோம் வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளும், ஜெயப்பிரகாஷ் நாராயணின் லோக் சட்டா கட்சியும் வரவேற்றுள்ளன.

இதற்கிடையே, ''விசாகப்பட்டணத்தில் வரும் 27ஆம் தேதி முதல் சிஐஐ மாநாடு நடப்பதால், பல்வேறு இடங்களிலும் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள், அந்த சமயத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினால், நமது மாநிலத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படும். ஆர்ப்பாட்டம் வேண்டாம்'' என்று மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், விசாகப்பட்டணம் ஆர்.கே பீச்சில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை என்று நடிகர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.பி. கவிதாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். சிலர் ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டுக்கும் சேர்த்து சிறப்பு அந்தஸ்து கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி