ஆப்நகரம்

வரி செலுத்தாத நிறுவனங்களின் வாசல் முன்பு குப்பைத் தொட்டிகளை வைத்த நகராட்சி நிர்வாகம்!

வரி செலுத்தாத நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள் முன்பு நகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டிகளை வைத்து தண்டித்துள்ளது.

Samayam Tamil 16 Aug 2019, 2:38 pm
அரக்கோணத்தில் வரி செலுத்தாத நிறுவனங்களிடம் இருந்து, வரிவசூலிப்பதற்காக, குப்பைத் தொட்டிகளை வைக்கும் நூதனமுறையை நகராட்சி கையாண்டுள்ளது.
Samayam Tamil arakkonam


வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சில நிறுவனங்கள் வரி செலுத்தாமல், வரி பாக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன. குறிப்பாக அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், வரி செலுத்தும்படி நோட்டிஸூம் அனுப்பப்பட்டது. இருப்பினும் சில நிறுவனங்கள் வரி பாக்கி வைப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டு வந்தது.

இந்த நிலையில், வரி செலுத்தாத நிறுவனங்கள், திருமணங்கள் முன்பு பெரிய இரும்பு குப்பைத் தொட்டிகள் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குப்பைத் தொட்டிகள் வைத்து, அதில் குப்பைகள் கொட்டுவதால், அதில் இருந்து வரும் தூர் நாற்றம் தொல்லை தாங்காமல், நிறுவனங்கள் வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்ற நோக்கில் இந்த நூதன முறையை நகராட்சி நிர்வாகம் கையாண்டுள்ளது. மேலும், வரி செலுத்தும் வரையில் குப்பைத் தொட்டிகள் அகற்றப்படமாட்டாது என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு கடந்தாண்டு மேட்டூரில் வரி செலுத்தாத கடைகள் முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்து தண்டிக்கப்பட்டது. இதே போல், கன்னியாகுமரியில் விவசாயி ஒருவர் வீட்டு வரி செலுத்தாத காரணத்தினால், அவரது வீட்டு முன்பு பேரூராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி