ஆப்நகரம்

அந்த விஷயத்தில் தமிழகம் தான் இரண்டாம் இடம்..!

போராட்டம் செய்து உலகத்தையே பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த மாநிலம் நம்ம தமிழகம். கடந்த 2016ல் அதிக போராட்டங்கள் செய்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

TOI Contributor 11 Jul 2017, 4:38 pm
போராட்டம் செய்து உலகத்தையே பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த மாநிலம் நம்ம தமிழகம். கடந்த 2016ல் அதிக போராட்டங்கள் செய்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
Samayam Tamil at 47 per day tamil nadu had second most no of protests last year
அந்த விஷயத்தில் தமிழகம் தான் இரண்டாம் இடம்..!

தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளை முன்னிருத்தி போராட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம், முழு மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி, மீத்தேன் திட்டத்துக்கு எதிராக, விவசாயிகள் போராட்டம் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

இந்நிலையில் தற்போது மிகவும் சூடுபிடித்துள்ள கதிராமங்கலம் போராட்டம், மாட்டிறைச்சி போராட்டம், மணல் கொள்ளை உள்ளிட்ட மொத்தம் 20450 போராட்டங்கள் நடந்துள்ளதாகவும், தினமும் 47 என்ற அளவிற்கு தமிழகத்தில் போராட்டங்கள் நடைப்பெறுவதாக தகவல் தெரிவிக்கின்றது.

இந்தியாவில் போராட்டங்களை நடத்துவதில் முதலிடத்தை உத்தரகாண்ட் மாநிலம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு மட்டும் 21,966 போராட்டங்கள் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் போராட்டம் நடைப்பெறும் மாநிலங்கள்:

உத்தரகாண்ட் - 21,966
தமிழகம் - 20,450
பஞ்சாப் - 11,876
தெலுங்கானா - 8,926
டெல்லி - 4,048
மகாராஷ்டிரா - 5,089
கேரளா -2,939
சத்தீஸ்கர் -7
மேகாலாயா - 7
நாகாலாந்து - 1

அடுத்த செய்தி