ஆப்நகரம்

ரஜினியைப் போல் கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோ சேவை வழங்கிய இளைஞர்!!

சென்னை : கர்ப்பிணி பெண்களிடம் பணம் வாங்காமல் சென்னையை சேர்ந்த இளைஞர் இலவசமாக ஆட்டோ ஓட்டினார் இந்த இலவச சேவையை சுதந்திர தினத்தன்று செய்தார்.

TNN 16 Aug 2017, 2:50 pm
சென்னை : கர்ப்பிணி பெண்களிடம் பணம் வாங்காமல் சென்னையை சேர்ந்த இளைஞர் இலவசமாக ஆட்டோ ஓட்டினார் இந்த இலவச சேவையை சுதந்திர தினத்தன்று செய்தார்.
Samayam Tamil auto driver of chennai gives free service to pregnant women
ரஜினியைப் போல் கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோ சேவை வழங்கிய இளைஞர்!!


சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் . வயது 28 . நேற்று சுதந்திர தினம் என்பதால் அவர் சமூக சேவை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வெளியில் வரும் கர்ப்பிணி பெண்களை அவர்கள் விரும்பிய இடங்களுக்கு ஆட்டோவில் இலவசமாக கொண்டு சென்றுவிட்டார்.

காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இந்த இலவச வேசவையை அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்தார்.இந்த உதவியால் கர்ப்பிணிப்பெண்களும் ,அவர்களின் குடும்பத்தாரும் அவரை பாராட்டினர் .

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, அவர் குணமடைந்து வரவேண்டி நோயாளிகளுக்காக தனது ஆட்டோவை இலவசமாக இயக்கியவர் சுகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Auto driver of Chennai gives free service to pregnant women

அடுத்த செய்தி