ஆப்நகரம்

இன்னும் கொஞ்ச நாட்களில் அழியப்போகும் பழங்காலத்து மொழி!!

பாகிஸ்தானில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் பதேசி என்ற பழங்காலத்து மொழியை 3 பேர் மட்டும் பேசி வருகின்றனர்.

Samayam Tamil 10 Mar 2018, 5:00 pm
பாகிஸ்தானில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் பதேசி என்ற பழங்காலத்து மொழியை 3 பேர் மட்டும் பேசி வருகின்றனர்.
Samayam Tamil badeshi only three people speak this extinct language
இன்னும் கொஞ்ச நாட்களில் அழியப்போகும் பழங்காலத்து மொழி!!


பாகிஸ்தானில் உள்ள பிஷிகிராம் பள்ளத்தாக்கு பகுதியில், சில தலைமுறைகளுக்கு முன் ‘பதேசி’ என்ற மொழி பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அம்மொழியை 3 பேர் மட்டுமே பேசி வருவதால், அது அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

அம்மூவரில் ஒருவரானா ரஹில் குல், தங்கள் மொழி அழிவதற்கு திருமணமே காரணம் என்று தெரிவித்துள்ளார். அதுபற்றி தெரிவித்த அவர், “பதேசி மொழி பேசிய பலரும் அருகில் உள்ள கிராமத்தில் ‘டோர்வாலி’ மொழி பேசும் பெண்களையே திருமணம் செய்தோம். எங்கள் குழந்தைகள் அவர்களின் தாய்மொழியான ‘டோர்வாலி’யையே கற்றுக்கொண்டதால் எங்கள் மொழி அழியத்தொடங்கியது.

இப்போது, வேலைவாய்ப்பு இல்லாததால் அனைவரும் சுற்றுலாத் தளமான ஸ்வாட் மாவட்டத்திற்கு செல்கின்றனர். அங்கு ‘பஷ்தோ’ மொழி முதன்மையாக பேசப்பட்டு வருவதால், ‘டோர்வாலி’ மொழிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தற்போது, பதேசி மொழியை நாங்கள் மட்டும் பேசி வருவதால் சில நேரங்களில் சில வாரத்தைகள் எங்களுக்கே மறந்து போய் விடுகிறது.” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இவர்கள் மறைவிற்கு பின் இம்மொழியும் அழியப்போவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி