ஆப்நகரம்

தற்கொலைப் படை தீவிரவாதியை கட்டிப் பிடித்து பல உயிர்களை காப்பாற்றிய ஆப்கன் போலீஸ்!!

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தீவிரவாதியை கட்டிப்பிடித்து வெடிகுண்டை வெடிக்கச் செய்து, உயிர் தியாகம் செய்து, பல உயிர்களை காப்பாற்றிய அந்த நாட்டின் இளம் போலீஸ்காரரை உலகமே பாராட்டி வருகிறது.

TOI Contributor 18 Nov 2017, 1:51 pm
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தீவிரவாதியை கட்டிப்பிடித்து வெடிகுண்டை வெடிக்கச் செய்து, உயிர் தியாகம் செய்து, பல உயிர்களை காப்பாற்றிய அந்த நாட்டின் இளம் போலீஸ்காரரை உலகமே பாராட்டி வருகிறது.
Samayam Tamil basam is a hero he saved many lives by bear hugging suicide bomber
தற்கொலைப் படை தீவிரவாதியை கட்டிப் பிடித்து பல உயிர்களை காப்பாற்றிய ஆப்கன் போலீஸ்!!

மக்களுக்குத் தான் போலீசார். மக்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவர்களது முக்கிய கடமைகளில் ஒன்று. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலத்தில் போலீஸ்காரர் ஒருவர் தனது கையில் வெடிகுண்டை பல கிலோ மீட்டர் எடுத்துச் சென்று வெடிக்கச் செய்து, பல மாணவர்களை காப்பாற்றினார் என்ற செய்தியை பார்த்தோம்.

இதேபோல் ஆப்கன் தலைநகர் காபூலில் ஒரு பிரபல ஓட்டலில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, பாதுகாப்பு வளையத்தையும் மீறி தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் ஓட்டலுக்குள் செல்ல முயற்சித்தார். இதை அறிந்து கொண்ட 25 வயது போலீஸ்காரர் பாசம் பாச்சா, அந்த தற்கொலைப் படை தீவிரவாதியை உள்ளே நுழைய விடாமல் தடுத்து தன்னுடன் அணைத்து வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

இவரது தியாகத்தால் பல உயிர்களை காப்பாற்றினர். இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் உள்பட பல்வேறு உலக நாடுகள் இந்த செய்தியை வெளியிட்டு இளம் போலீஸ்காரரின் தியாகத்தை பாராட்டியுள்ளது.

இவரது தியாகத்தை குறித்து தலைமை போலீஸ் அதிகாரி பசிர் முஜாஹித் கூறுகையில், ‘’தன்னுடைய உயிரை தியாகம் செய்து பல உயிர்களை பாசம் காப்பாற்றியுள்ளார்’’ என்றார்.

அடுத்த செய்தி