ஆப்நகரம்

ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்களின் பாடல்!

ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்களின் பாடல்!

TOI Contributor 16 Feb 2017, 9:14 am
பெங்களூரு : சமூகத்தில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராக பலரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். பாலின பேதமானது பணிபுரியும் இடம், திருமணம், உறவுகள் என்று எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. இதனால் ஆண்கள் அதிகமாக இருக்கும் துறைகளில் பெண்களும் தங்களின் திறமையை நிரூபித்து வருகின்றனர். உதாரணமாக ஸ்கேட்டிங்கில் ஆண்களே அதிகம் பங்கு பெற்று வந்த நிலையில் தற்போது மத்தியபிரதேசம், ஆப்கானிஸ்தான், கம்போடியா என்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஸ்கேட்டிங்கில் பங்குபெற்றுவருகின்றனர்.
Samayam Tamil bengalurus women skaters are fighting back against patriarchy
ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்களின் பாடல்!


குறிப்பாக பெங்களூருவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாக உள்ள நிலையில், பெங்களூரு சாலையில் பெண்கள் ஸ்கேட்டிங் செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. புடவை கட்டிக்கொண்டு, ஆண்கள் போன்று உடை அணிந்து கொண்டு, சிறுமிகள் என எல்லோரும் ஆணாதிக்கதிற்கு எதிராக ஸ்கேட்டிங் போர்டில் சாலையில் செல்வது போன்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி