ஆப்நகரம்

ரத்த தானத்தையே அன்பளிப்பாக அளித்து, மேற்கு வங்கத்தில் சமூக சீர்திருத்த திருமணம்!

திருமண நிகழ்வின் போது, ரத்த தானம் அளித்து நூதன முறையில் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

Samayam Tamil 25 Feb 2018, 2:40 pm
கொல்கத்தா: திருமண நிகழ்வின் போது, ரத்த தானம் அளித்து நூதன முறையில் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
Samayam Tamil blood donation wedding happened in west bengal
ரத்த தானத்தையே அன்பளிப்பாக அளித்து, மேற்கு வங்கத்தில் சமூக சீர்திருத்த திருமணம்!


மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டம் ஹேத்தல் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தீப் ராய்(31) - ஸ்ரீலாமோண்டல்(25). இவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அவர்களின் பகுதியில் போதிய ரத்தம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் தங்கள் திருமணத்தில் ரத்த தானம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து திருமண அழைப்பிதழில் அன்பளிப்புக்கு பதிலாக ரத்த தானம் செய்யுங்கள் பதிவிட்டனர். இது திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

அவர்களும் மனமுவந்து ரத்த தானம் அளித்தனர். இதனை அப்பகுதியில் ரத்த தான திருமணம் என்றே அழைத்தனர்.

கடந்த 2017ல் உஜ்ஜனியை சேர்ந்த குஞ்ஜன் ஜெயின் - ஓஸ்ஹின் ஜோடியும், 2013ல் ஒடிசாவை சேர்ந்த சுவேந்த் குமார் - சுசீத்ரா ஜோடியும் ரத்த தான திருமணம் செய்தனர்.

Blood donation wedding happened in West bengal.

அடுத்த செய்தி