ஆப்நகரம்

கூண்டிலிருந்து புறாவை பறக்க விட்டதால், 2 வயது சிறுவன் கொலை!

பெங்களூருவில் கூண்டிலிருந்து புறாவை வெளியே விட்டதால், 2 வயது குழந்தையைக் பக்கத்து வீட்டு சிறுவனே கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

TOI Contributor 9 Feb 2018, 11:49 am
பெங்களூருவில் கூண்டிலிருந்து புறாவை வெளியே விட்டதால், 2 வயது குழந்தையைக் பக்கத்து வீட்டு சிறுவனே கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Samayam Tamil boy kills 2 year old for setting free his pigeons
கூண்டிலிருந்து புறாவை பறக்க விட்டதால், 2 வயது சிறுவன் கொலை!


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோழதேவன்லாளியைச் சேர்ந்தவர்கள் பசவராஜ் – வெங்கம்மா தம்பதியினர். இவர்களுடைய இரண்டு வயது குழந்தை வெங்கடேஷ். இவர்களுடைய பக்கத்து வீட்டில் டீ வியாபாரம் செய்துவருபவருடைய மகன் ரமேஷ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

கடந்த வாரம் ரமேஷ், 300 ரூபாய் கொடுத்து மூன்று புறாக்களை வாங்கி வந்து தனது கூட்டில் அடைத்து வளர்த்து வந்துள்ளான்.

இதைப் பார்த்து வெங்கடேஷ், புறாவை பார்க்க அடிக்கடி வந்தாதகவும், புறாவை தொடக்கூடாது என்று ரமேஷ் கண்டித்தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதனன்று ரமேஷ் இல்லாத போத காலை 10.40 மணியளிவில், வெங்கடேஷ் மற்றும் அவனுடைய மூத்த சகோதரரும், கூண்டை திறந்து புறாவை பறக்க விட்டுள்ளனர்.

இதையடுத்து வீடு திரும்பிய போது, கூண்டில் புறா இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ், சத்தம் போட்டு வெங்கடேசிடம் விசாரிக்க, தவறை ஒப்புக் கொண்டுள்ளான்.

பின்னர், ரமேஷ் அவனை அழைத்துக் கொண்டு புறாவை தேடி சென்றுள்ளான். ஒரு இடத்தில் புறாவை கண்டுபிடிக்க, அதை லாவகமாக கையில் பிடித்த ரமேஷ் மகிழ்ச்சியடைந்தான். இதைக் கண்டு பொறாமை கொண்ட வெங்கடேஷ் மீண்டும், ரமேஷ் கையை தட்டி விட்டு, புறாவை பறக்க விட்டுள்ளான்.

இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ரமேஷ், வெங்கடேஷின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.

ஆனால், அவன் மயக்க நிலையில் கிடப்பதாக எண்ணிய ரமேஷ், புறாவை பிடித்துக் கொண்டு வீடு திரும்பினான்.

சிறிது நேரம் கழித்து வெங்கடேஷ் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவனது பெற்றோர்கள் அவனை தேடிச் சென்றனர். அங்கு கீழே கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வெங்கடேசை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால், அதிர்ச்சியடைந்த வெங்கடேஷின் பெற்றோர்கள், ரமேஷின் தந்தை மீது போலீசில் புகார் அளித்தனர்.

போலீஸ் விசாரணையில், ரமேஷின் பெற்றோர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பதும், கொலைக்க காரணம் ரமேஷ் தான் என்பதையும் கண்டுபிடித்தனர். தொடர்ந்து ரமேஷை சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு சென்றனர்.

அடுத்த செய்தி