ஆப்நகரம்

"வரதட்சணையாக பல்சர் பைக் கேட்ட மாப்பிள்ளை" : தலாக் கொடுத்த மணப்பெண்.!

திருமணத்திற்கு வரதட்சணையாக பல்சர் பைக் வேண்டும் என அடம்பிடித்த மாப்பிள்ளைக்கு, திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலே மணப்பெண் தலாக் அளித்துள்ளார்.

TNN 28 Apr 2017, 12:47 pm
திருமணத்திற்கு வரதட்சணையாக பல்சர் பைக் வேண்டும் என அடம்பிடித்த மாப்பிள்ளைக்கு, திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலே மணப்பெண் தலாக் அளித்துள்ளார்.
Samayam Tamil bride divorced bride groom with the help of talaq for expecting pulsar bike as a dowry
"வரதட்சணையாக பல்சர் பைக் கேட்ட மாப்பிள்ளை" : தலாக் கொடுத்த மணப்பெண்.!


ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியைச் சேர்ந்த அன்சாரி என்பவருக்கும், ருபானா பர்வீன் என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடியும் வரை வரதட்சணை குறித்து மாப்பிள்ளை வீட்டார் ஏதுமே கேட்கவில்லை. இதனால் மனம் மகிழ்ந்த ருபானாவின் தந்தை, மாப்பிள்ளை அன்சாரிக்கு பைக் ஒன்றை பரிசளித்தார்.

ஆனால் அதன் பின்னர் தனது சுய ரூபத்தை காட்டிய அன்சாரி, தனக்கு பல்சர் பைக்தான் வேண்டும் என அடம்பிடித்துள்ளார். உறவினர்கள்,சுற்றத்தினர் எவ்வளவு எடுத்துக் கூறியும், தனது முடிவில் அன்சாரி உறுதியாக இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த மணமகள் ருபானா, தனது கணவருக்கு தலாக் தெரிவித்தார். திருமணம் நடந்து முடிந்த சில மணி நேரங்களிலே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த முஸ்லீம் மதப் பெரியவர்கள், அன்சாரிக்கும்,ருபானாவுக்கும் தலாக் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருமணத்திற்காக செலவளித்த 7 லட்ச ரூபாய் பணத்தை திரும்ப அளிக்குமாறு, அன்சாரியின் வீட்டினரிடம் ருபானாவின் தந்தை கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே, அன்சாரி மற்றும் அவனது தம்பியை சிறைபிடித்த ருபானாவின் உறவினர்கள், அவர்கள் இருவருக்கும் மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து அசிங்கப்படுத்தினர்.



இதன் பின்னர் சில மணி நேரங்களில் அன்சாரியின் வீட்டினர், அந்த தொகையை கொடுத்து இருவரையும் மீட்டனர். இந்த சம்பவங்கள் நடந்த அன்றைய இரவே, வேறு ஒரு நபருடன் ருபானாவுக்கு திருமணம் நடைபெற்றது.

Bride divorced Bride Groom with the help of talaq for expecting Pulsar Bike as a dowry

அடுத்த செய்தி