ஆப்நகரம்

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்: இவர் தான் 24 வயது நிஜ ஹல்க்

சுமார் 400 பவுண்ட் எடை கொண்ட 24 வயது ஹல்க், பளு தூக்கும் வீரராக வலம் வருகிறார்.

TNN 25 Apr 2017, 12:51 pm
டெஹ்ரான்: சுமார் 400 பவுண்ட் எடை கொண்ட 24 வயது ஹல்க், பளு தூக்கும் வீரராக வலம் வருகிறார்.
Samayam Tamil called the iranian hulk this 24 year old power lifter weighs 174 kilos and has 22 inch biceps
ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்: இவர் தான் 24 வயது நிஜ ஹல்க்


ஈரான் நாட்டைச் சேர்ந்த சஜத் கரிபி(24) மரபுவழி பண்பின் காரணமாக சிறுவயது முதலே மிகவும் குண்டாக காட்சி அளித்துள்ளார். அதிகப்படியான உணவு உட்கொள்வதன் மூலம், இயல்பை விட அவரது வளர்ச்சி அதிகமானது. தனது உடல் எடையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்காக, பளு தூக்கும் விளையாட்டில் ஆர்வத்தை வளர்த்து கொண்டார். தொடர் உடற்பயிற்சியின் காரணமாக கிட்டத்தட்ட 174 கிலோ எடை பளுவை அசால்ட்டாக தூக்குகிறார்.

தனது கையில் 22 இஞ்ச் பைசெப்ஸ் உடன் காட்சியளிக்கும் அவர், நாள்தோறும் உடற்பயிற்சி செய்து வருகிறார். தனக்கென இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி, அதில் தொடர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஈரான் நாட்டின் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஆனால் அவர் பங்கேற்கும் போட்டிகளில் பெரும்பாலும் எதிராளிகள் யாரும் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் நாட்டின் பிரபல தொலைக்காட்சிகளில் வலம் வந்து, உடற்பயிற்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

Called The Iranian Hulk, This 24-Year-Old Power-Lifter Weighs 174 Kilos And Has 22-Inch Biceps.

அடுத்த செய்தி