ஆப்நகரம்

கிளியை கண்டுபிடித்து தந்தால் ரூ.10,000 பரிசுத் தொகை; பிரிவால் வாடிய உரிமையாளரின் அறிவிப்பு!

கிளியை கண்டுபிடித்து தந்தால், ரூ.10,000 பரிசாக வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர் அறிவித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 22 Dec 2017, 5:46 pm
அலகாபாத்: கிளியை கண்டுபிடித்து தந்தால், ரூ.10,000 பரிசாக வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர் அறிவித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil cash reward of rs 10000 for missing parrot in up
கிளியை கண்டுபிடித்து தந்தால் ரூ.10,000 பரிசுத் தொகை; பிரிவால் வாடிய உரிமையாளரின் அறிவிப்பு!


உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு. இவர் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து ரூ.50,000 மதிப்பில் காங்கோ நாட்டு கிளிகள் இரண்டு வாங்கியுள்ளார். இதற்கு மாதந்தோறும் ரூ.1000 செலவிட்டு வந்துள்ளார்.

வெளிநாட்டு பறவைகள் என்பதால், உள்ளூர் தானியங்கள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதில்லை. பிறந்து சில நாட்களே ஆன கிளிகளை, மிகவும் அக்கறையாக கவனித்து வந்தனர்.

இந்த சூழலில் லில்லி என்று பெயரிடப்பட்ட கிளி திடீரென காணாமல் போய்விட்டது. இதனால் அவரது இரண்டு பெண் குழந்தைகளும் சரியாக உண்ணாமல் மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளனர்.

இதையடுத்து தனது கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.5000 வழங்கப்படும் என்று நோட்டீஸ் விநியோகித்துள்ளனர்.

ஆனால் கிளி கிடைக்காததால், சன்மானத்தை ரூ.10,000ஆக உயர்த்தியுள்ளனர். இந்நிலையில் 26 நாட்களுக்கு பிறகு, அருகிலுள்ள வீட்டில் கிளி கண்டெடுக்கப்பட்டது.

Cash reward of Rs 10,000 for missing parrot in UP.

அடுத்த செய்தி