ஆப்நகரம்

மது அருந்தியதால் ஏற்பட்ட வாகன விபத்துகள்:சென்னை முதலிடம்..!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளது.

TNN 6 Jan 2017, 3:17 pm
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளது.
Samayam Tamil chennai leads in drink and drive deaths all over the world
மது அருந்தியதால் ஏற்பட்ட வாகன விபத்துகள்:சென்னை முதலிடம்..!


தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விபரத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி சென்னையில் கடந்த ஆண்டு மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதில் 568 விபத்துகள் நடைபெற்றுள்ளன.இந்த விபத்துகளினால் 93 பேர் உயிரிழந்துள்ளனர்.வேறு எந்த நகரிலும் இந்த அளவுக்கு மது போதையினால் விபத்துகள் நடக்கவில்லை.

மேலும் சாலை விபத்துகளில் தமிழகமே முன்னணியில் உள்ளது.தமிழகத்தில் நிகழும் மரணங்களில் 13 சதவீதம் சாலை விபத்துகளினால் நிகழ்கிறது.அதிலும் குறிப்பாக இரு சக்கர வாகன விபத்துகளால் நிகழும் உயிரிழப்பு மிக அதிகம் எனவும் அந்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கும்,சாலை விதிகளை மீறுவோருக்கும் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படாதவரை தமிழகத்தில் சாலை விபத்துகள் குறையாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Chennai leads in drink and drive deaths all over the world

அடுத்த செய்தி