ஆப்நகரம்

ஏலியன் தோற்றத்தில் பிறந்த குழந்தை!

ஏலியன் தோற்றத்தில் பிறந்த குழந்தை!

TOI Contributor 22 Mar 2017, 9:10 pm
பீகார் : கதிகார் பகுதியில் வித்தியாசமான தோற்றத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தடிமனான தோல் மற்றும் ஒழுங்கற்ற உருவத்துடன் பிறந்துள்ள இந்தக்குழந்தை “ஹர்லிகுன் இச்தியோசிஸ்” (Harlequin Ichthyosis) எனும் மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குறைபாடு உடலின் தோலை பாதிக்கிறது. ஆனால் உள்ளூர் மக்கள் ஏலியன் குழந்தை என்றும் சக்தி வாய்ந்த குழந்தை என்றும் வர்ணிக்கின்றனர்.
Samayam Tamil child born with deformed features termed alien supernatural in bihar
ஏலியன் தோற்றத்தில் பிறந்த குழந்தை!


கலிதா பேகம் (35 ) என்ற பெண்ணுக்கு கடந்த திங்கள் கிழமை இரவு குழந்தை பிறந்துள்ளது. சிறிய தலை மற்றும் பெரிய கண்களுடன் பிறந்துள்ள குழந்தையை பார்த்து கலிதா அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் குழந்தைக்கு அனென்ஸ்பலி (Anencephaly) எனும் நோயின் அறிகுறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை இருக்காது. குழந்தை பிறந்த பின்னர் கலிதா பேகம் தூக்குவதற்கே மறுத்துள்ளார். அங்குள்ள செவிலிகளிடம் தன் கண்ணில் படாமல் தூக்கிச்சென்றுவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் அதன் பின்பு தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு குழந்தையை தூக்கியுள்ளார்.

ஆனால் அந்தப்பகுதி மக்கள் குழந்தை கடவுள் ஹனுமானின் அவதாரம் என்று கூறிவருகின்றனர். இது போன்ற உடல்நலக்குறைபாட்டுடன் குழந்தை பிறப்பது இது முதல் முறை அல்ல. இது போன்று ஏற்கனவே குழந்தைகள் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி