ஆப்நகரம்

திருமணம் செய்ய இருந்த காதலனின் ஆபாச படம் இருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண்

4 ஆண்டுகள் காதலித்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலனின் மொபைலில் ஆபாச படங்கள் இருந்ததால் திருமணத்தை நிராகரித்துள்ளார் மணப்பெண்.

Samayam Tamil 24 Aug 2018, 8:46 pm
நியூயார்க் : 4 ஆண்டுகள் காதலித்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலனின் மொபைலில் ஆபாச படங்கள் இருந்ததால் திருமணத்தை நிராகரித்துள்ளார் மணப்பெண்.
Samayam Tamil Claire


அமெரிக்காவின் உடா பகுதியை சேர்ந்தவர் 21 வயது க்ளாய்ரே டால்டன். இவர் 4 ஆண்டுகள் காதலித்த நபரை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென திருமணத்தை நிறுத்துவதாக நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தனது முகநூல் மூலம் அறிவித்துள்ளார்.

அந்த பதிவில், “தனது வருங்கால கணவனின் மொபைல் போனில் ஆபாச படங்கள் இருப்பதே திருமணத்தை நிறுத்துவதற்கான முக்கிய காரணம். நான் மிகவும் மத நம்பிக்கை கொண்டவள். கடவுளின் விதிகள் சுற்றிய ஒரு உறவு எங்களுக்குள் வேண்டும் என விரும்புகிறேன்.” என விளக்கியுள்ளார்.


இதற்கு க்ளாய்ரேவுக்கு விளக்கமளித்த காதலன், “அந்த ஆபாச படங்கள் தனது சகோதரன் பார்த்ததாகவும், தன் மீது தவறில்லை.” என கூறியுள்ளார். ஆனால அதை ஏற்க மறுத்த க்லாய்ரே திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

க்ளாய்ரேவின் பதிவிற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி