ஆப்நகரம்

இதுதான் தூய்மை இந்தியா திட்டமாம்; சுத்தமான இடத்தில் குப்பைக் கொட்டி சுத்தம் செய்த பாஜக...!

தூய்மையாக இருந்த இடத்தில் குப்பைக் கொட்டி சுத்தம் செய்த பாஜகவினரால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

TNN 14 Jun 2017, 6:26 pm
வேலூர்: தூய்மையாக இருந்த இடத்தில் குப்பைக் கொட்டி சுத்தம் செய்த பாஜகவினரால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Samayam Tamil clean india movement made suffer with people in vellore
இதுதான் தூய்மை இந்தியா திட்டமாம்; சுத்தமான இடத்தில் குப்பைக் கொட்டி சுத்தம் செய்த பாஜக...!


வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த அமைச்சர் கிரண் மகேஸ்வரி திருப்பத்தூர் வந்திருந்தார். குப்பைகள் நிறைந்த இடத்தை சுத்தம் செய்து, அதனை புகைப்படம் எடுத்து விளம்பரமாக அளிக்க முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்த போது, அந்த இடம் தூய்மையாக இருந்தது.

இதையடுத்து அங்கிருந்த பாஜகவினர், குப்பைகளை அப்பகுதி முழுவதும் சிதறிய படி போட்டனர். பின்னர் அமைச்சர் கிரண் மகேஸ்வரி, துடைப்பத்தால் குப்பைகளை கூட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த சம்பவத்தை கண்ட அங்கிருந்த மக்கள் மிகவும் கோபமடைந்தனர்.

Clean India movement made suffer with people in Vellore.

அடுத்த செய்தி