ஆப்நகரம்

மாட்டிற்கு வளைகாப்பு நடத்திய கோயம்புத்தூர் விவசாயி!

கால்நடைகளை வீட்டுன் ஒருவரைப் போல் நடத்துவது நம் தமிழரின் வழக்கமாகும். இந்நிலையில் கோயம்புத்தூர் விவசாயி தனது மாட்டிற்கு வளைகாப்பு நடத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

TNN 16 Sep 2017, 11:10 am
கோவை: கால்நடைகளை வீட்டுன் ஒருவரைப் போல் நடத்துவது நம் தமிழரின் வழக்கமாகும். இந்நிலையில் கோயம்புத்தூர் விவசாயி தனது மாட்டிற்கு வளைகாப்பு நடத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil coimbatore farmer conducted a baby shower function for his country cow
மாட்டிற்கு வளைகாப்பு நடத்திய கோயம்புத்தூர் விவசாயி!


கோயம்புத்தூர் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த விவசாயி கிஷோர் குமார், இவர் தனது நாட்டு மாட்டிற்கு வளைகாப்பு நடத்தி அப்பகுதி மக்களை வியப்படையச் செய்துள்ளார். மாட்டிற்கு பட்டுப்புடவை அணிவித்து, கொம்புகளில் வளையல்களையும் கால்களில் கொலுசுகளையும் மாட்டி, புரோகிதரைக் கொண்டு வளைகாப்பு சடங்குகளை செய்துள்ளார்.

மேலும், இந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு 11 வகையான உணவைப் படைத்து விருந்தளித்துள்ளார். மாட்டின் மீது அவர் கொண்ட பாசம் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

நாட்டு மாடுகளை அழிவிலிருந்து காக்கவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திதாக கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு மக்களிடையே நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி