ஆப்நகரம்

செல்ஃபி மோகம்: கடலில் மூழ்கி தம்பதிகள் மரணம்

மதுரை: திருப்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தம்பதிகள் செல்ஃபி எடுக்க முயன்ற போது கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

TOI Contributor 18 Jul 2016, 9:56 pm
மதுரை: திருப்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தம்பதிகள் செல்ஃபி எடுக்க முயன்ற போது கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil couple taking selfie swept away by giant wave in kanyakumari
செல்ஃபி மோகம்: கடலில் மூழ்கி தம்பதிகள் மரணம்


உமர் ஷெரீப்(42), வல்லியன்காடு பகுதியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது மனைவி ஃபாத்திமா பீவி(40), பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கர்பிஷா துல் குப்ரா(12), ஆயிஷா சித்திக்(10) ஆகிய இருமகள்கள் உள்ளனர்.

உமர் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரியில் உள்ள தனது நண்பர் ஜாஃபர் சித்திக்(45) வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிறு மாலை சங்குத்துறை கடற்கரைக்கு சென்ற ஷெரீப் மற்றும் அவரது மனைவியும் கடலில் நின்றுக் கொண்டு செல்ஃபி எடுக்கக் முயற்சித்துள்ளனர்.

அப்போது எதிர்பாராமல் வந்த பெரிய அலை, ஃபாத்திமாவை அடித்துச் சென்றது. அவரை காப்பாற்ற முயன்ற உமரும் அலையில் சிக்கினார். அருகில் இருந்தவர்கள் தம்பதிகளை காப்பாற்ற முயன்று இருவரையும் வெளியே இழுத்துள்ளனர். அதில் ஃபாத்திமா இறந்துவிட்டார். உமர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருவரது உடலையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சூசீந்திரம் போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி