ஆப்நகரம்

சாணியடி திருவிழா: பீரேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஈரோடு மாவட்டம் தாளவாடி கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் நேற்று சாணியடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

TNN 22 Oct 2017, 11:37 am
ஈரோடு மாவட்டம் தாளவாடி கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் நேற்று சாணியடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
Samayam Tamil cow dung festival in erode temple
சாணியடி திருவிழா: பீரேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்


ஈரோடு மாவட்டம் தாளவாடி கும்டாபுரம் மலைக்கிராமத்தில் பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளியை அடுத்த 3வது நாளில் சாணியடி திருவிழா நடக்கும். ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசி மகிழும் பாரம்பரிய விழாவாகும்.

இந்த ஆண்டுக்கான விழா சனிக்கிழமை தொடங்கியது. இதற்காக பசுமாட்டு சாணம் சேகரிக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டது. ஊர்க்குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமிவை வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர், பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின், பக்தர்கள், ஒருவருக்கொருவர் சாணத்தை மேலே வீசிக்கொண்டனர். இந்த பாரம்பரிய விழாவைப் பார்க்க பெண்களும் திரளாக வந்திருந்தனர். சாணியடி நிகழ்வு முடிந்த பிறகு பக்தர்கள் குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனர்.

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி