ஆப்நகரம்

பக்கவாதம் வந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் தற்கொலை முயற்சி

கடலூரில் பக்கவாம் வந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 May 2018, 11:49 pm
கடலூரில் பக்கவாம் வந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil drawing master suicide


கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சேரன். இவர் அங்குள்ள மங்களூர் அரசு பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்களுக்கு முன்பு சேரன், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மூன்று மாத காலம் விடுப்பு எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில், மூன்று மாதம் வகுப்புக்கு செல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய கடலூர் முதன்மை கல்வி அலுவலர், சேரனை சஸ்பெண்ட் செய்தார். பின்னர், பணியில் சேருவதற்கான கடிதத்தை வழங்கியபின்பும், முதன்மை கல்வி அலுவலர் சேரனை கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சேரன், நேற்று கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார்.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சேரனை சமாதானம் செய்து இறக்கினர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி