ஆப்நகரம்

தினக்கூலி தொழிலாளரை கற்பழித்து, வழிப்பறி செய்த மர்ம மனிதர்கள்..!

ஹைதராபாத்தில் தினக்கூலி பெண் தொழிலாளரை கற்பழித்தது மட்டுமின்றி, அவரிடம் கொள்ளையடித்துச் சென்ற இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

TNN 24 May 2017, 4:20 pm
ஹைதராபாத்தில் தினக்கூலி பெண் தொழிலாளரை கற்பழித்தது மட்டுமின்றி, அவரிடம் கொள்ளையடித்துச் சென்ற இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Samayam Tamil daily wages worker raped and robbed in hyderabad
தினக்கூலி தொழிலாளரை கற்பழித்து, வழிப்பறி செய்த மர்ம மனிதர்கள்..!


கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம், நேற்றுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடுமையாக காயமடைந்த அந்த பெண்ணை, உள்ளூர் மக்கள் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமையை அந்த பெண் விவரித்துள்ளார்.

தன்னுடைய காண்ட்ராக்டரிடமிருந்து நான்கு நாள் சம்பளமான 1200 ரூபாயை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வலுக்கட்டாயமாக ஆளில்லாத பகுதிக்கு தூக்கிச் சென்று கற்பழித்துள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணை கட்டையால் தாக்கிய அவர்கள், அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை பிடிங்கி சென்றுள்ளார். சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த அந்த பெண்ணை மீட்ட உள்ளூர் மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Daily wages worker raped and robbed in Hyderabad

அடுத்த செய்தி