ஆப்நகரம்

வானொலி மூலம் தூய்மை விழிப்புணர்வு: டெல்லி பாஜக திட்டம்

வானொலி மூலம் மக்களிடம் நகரைத் தூய்மையாக வைத்திருப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டெல்லி பாஜக முடிவு செய்துள்ளது.

TNN 10 Jun 2017, 6:26 pm
வானொலி மூலம் மக்களிடம் நகரைத் தூய்மையாக வைத்திருப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டெல்லி பாஜக முடிவு செய்துள்ளது.
Samayam Tamil delhi bjp goes back to good old radio to create awareness on sanitation
வானொலி மூலம் தூய்மை விழிப்புணர்வு: டெல்லி பாஜக திட்டம்


தலைநகர் டெல்லியில் நாள்தோறும் அதிகரித்து வரும் மாசினால் அந்நகரம் மக்கள் வாழ தகுதியற்ற நகராக மாறிவருகிறது. இதனால், நகரில் தூய்மையை மேம்படுத்தும் விதமாக வானொலி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அம்மாநில பாஜக திட்டமிட்டுள்ளது.

இதன் அங்கமாக ரேடியா சிட்டி வானொயில் இன்றைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, லஜபாத் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.



பொதுமக்கள் தங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவும் பட்சத்தில் கவுன்சிலரிடம் உடனடியாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம் என்று ஆலோசடை வழங்கினார். தொடர்ந்து தூய்மை பேணுவது தொடர்பான கேள்விகளை தன்னிடம் கேட்கலாம் என்றும் அவர் கூறினார்.

மனோஜ் திவாரி 20 நாட்கள் இதுபோன்ற வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி