ஆப்நகரம்

ஸ்மார்ட்ஃபோனில் ஆபாசப் படம் பார்ப்பவர்களே உஷார்!

ஸ்மார்ட்ஃபோனில் ஆபாசப் படம் பார்ப்பவர்களே, உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எளிதாக திருடப்படலாம்…

TNN 23 Mar 2017, 10:27 pm
ஸ்மார்ட்ஃபோனில் ஆபாசப் படம் பார்ப்பவர்களே, உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எளிதாக திருடப்படலாம்…
Samayam Tamil do you watch porn in your smartphone
ஸ்மார்ட்ஃபோனில் ஆபாசப் படம் பார்ப்பவர்களே உஷார்!


இன்றைய நவீன யுகத்தில், ஸ்மார்ட்ஃபோனில் ஆபாசப்படங்கள் பார்ப்பது வழக்கமாகியுள்ளது. ஆண், பெண் பேதமின்றி, வயது வித்தியாசம் இன்றி, ஆபாசப்படங்கள் பார்க்க, பலரும் ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்துகின்றனர்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் ஆபாசப் படங்கள் பார்க்க, எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. இதனால், நாம் எத்தகைய ஆபாசப் படங்களையும் பார்க்க முடியும் என்பதால், பல்வேறு ஆபாசப் பட இணையதளங்களைப் பலரும் பார்வையிடுவதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலமாக, உங்களின் ஸ்மார்ட்ஃபோனில் உள்ள தகவல்கள் எளிதாக திருடப்படலாம் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிகநேரம் ஆபாச வீடியோ பார்ப்பதால், உங்களின் இணையதள டேட்டா பேக்கேஜ் எப்போது வேண்டுமானாலும் காலியாகிவிடலாம். ஆனால், ஆபாசப் படம் பார்க்கும் சுவாரஸ்யத்தில் அதை நீங்கள் மறந்துவிடுவீர்கள். இதனால், உங்களின் ரீசார்ஜ் கட்டணத் தொகை, டேட்டா பேக்குக்குப் பதிலாகக் கட் செய்யப்பட்டுவிடும்.

அதேபோன்று, கண்ட கண்ட இணையதளங்களுக்குச் செல்வதால், திடீரென ஏதேனும் ஒரு ஆப் அல்லது செயலி உங்களது ஸ்மார்ட்ஃபோனில் தன்னிச்சையாகவே இன்ஸ்டால் ஆகிவிடும்.

உங்களது நெட் பேங்கிங், பேடிஎம் உள்ளிட்ட பல்வேறு பணப் பரிவர்த்தனை சேவைகளை ஹேக்கர்கள் எளிதாக ஹேக் செய்து, தகவல்களை திருடிவிடும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். இதற்காக, ஆன்டி வைரஸ் அல்லது மால்வேர் போன்ற மென்பொருட்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் அந்தரங்க புகைப்படங்கள் வரை ஊடுருவ முடியும். பல முக்கிய பிரபலங்கள் இப்படித்தான் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

எனவே, ஆபாசப் படங்களை பார்க்க மட்டுமே ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தாதீர்கள் என்றும், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Do you watch porn in your smartphone? Beware your datas may be hacked.

அடுத்த செய்தி