ஆப்நகரம்

கர்ப்பிணி வயிற்றில் ஊசியை தவறவிட்ட மருத்துவர்கள்; 16 மணி நேர போராட்டம்!

பிரசவத்தின் போது, கர்ப்பிணி வயிற்றில் ஊசியை மருத்துவர்கள் தவறவிட்டனர்.

TNN 10 Sep 2017, 2:23 pm
போபால்: பிரசவத்தின் போது, கர்ப்பிணி வயிற்றில் ஊசியை மருத்துவர்கள் தவறவிட்டனர்.
Samayam Tamil doctors left needle inside pregnant womans body
கர்ப்பிணி வயிற்றில் ஊசியை தவறவிட்ட மருத்துவர்கள்; 16 மணி நேர போராட்டம்!


மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சுல்தானிய ஸனானா மருத்துவமனையில் ராகி கனோடா(23) என்ற பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற பெண்ணிற்கு கடுமையான கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. பிரசவம் முடிந்த பின்னர் ஏற்படும் வலி என்று குடும்பத்தினர் விட்டுவிட்டனர். ஆனால் தொடர்ச்சியாக வலி ஏற்படவே மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில், உடலுக்குள் ஊசி ஒன்று இருந்தது தெரியவந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் ஊசியை எடுத்தனர். பிரசவத்தின் போது ஸ்பைனல் அனஸ்தீசியா அளிக்கும் போது, ஊசி தவறவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு ராகியின் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது.

Bhopal: Doctors left needle inside pregnant woman’s body, removes after 16 hours.

அடுத்த செய்தி