ஆப்நகரம்

நன்றியுணர்வு என்றால் நாய் தான்! மனதை உருக்கும் வீரச்செயல்!!

நன்றியுணர்வு என்றால் நாய் தான்! மனதை உருக்கும் வீரச்செயல்!!

TOI Contributor 19 Mar 2017, 5:11 pm
எர்ணாகுளம் : செல்லப்பிராணிகளில் நாய்களை போன்ற நன்றியுள்ள ஜீவன் எதுவும் கிடையாது. மனிதர்களை பல்வேறு வகைககளில் நாய்கள் பாதுகாக்கின்றன. அப்படி நாயின் நன்றியுணர்வை அறியும் விதமானதொரு சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. மௌலி எனும் மூன்று வயது நாய் வித்தியாசமாக ரொம்ப நேரம் குறைக்கும் சத்தம் கேட்டு, வீட்டில் இருப்பவர்கள் வெளியே வந்துள்ளனர். ஆனால் அவர்களை வெளியே வரவிடாமல் தடுத்த மௌலி, வீட்டு வாசல் நோக்கி வந்த 5 அடி நீளமுள்ள விஷப்பாம்பிடம் சண்டையிட்டுள்ளது.
Samayam Tamil dog sacrifices life fighting cobra to save couple
நன்றியுணர்வு என்றால் நாய் தான்! மனதை உருக்கும் வீரச்செயல்!!


சுமார் 30 நிமிடம் பாம்புடன் சண்டையிட்ட மௌலி கடைசியாக பாம்பினை கடித்து கொன்றது. ஆனால் பாம்பும் குட்டி நாயான மௌலியை கடித்து விட்டதால், மௌலி பரிதாபமாக இறந்தது. அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாங்கெலில் கங்காதரன் என்பவர் ஒரு மாத குட்டியாக மௌலி இருந்த போதில் இருந்து வளர்த்து வருகிறார். மௌலி எனும் குட்டி நாயின் நன்றியுணர்வு மற்றும் தைரியம் இணையத்தில் வைரவாகி வருகிறது.

அடுத்த செய்தி