ஆப்நகரம்

வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து, வீட்டு உரிமையாளரைக் கொன்று, நகை திருட்டு!!

வாடகைக்கு வீடு கேட்பது போல வந்து, வீட்டு உரிமையாளர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தங்க நகையைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Nov 2018, 2:10 am
திருவாரூரில் வாடகைக்கு வீடு கேட்பது போல வந்து, வீட்டு உரிமையாளர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தங்க நகையைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து, வீட்டு உரிமையாளரைக் கொன்று, நகை திருட்டு!!
வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து, வீட்டு உரிமையாளரைக் கொன்று, நகை திருட்டு!!


திருவாரூர் வழ வாய்கால் பகுதியில் உள்ள விஷ்ணு தோப்பில் செல்லப்பிள்ளை (75) மற்றும் சகுந்தலா (65) என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்கள் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, கடந்த 5 நாட்களுக்கு முன் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் வந்து அவர்கள் வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளார். தான் ஒரு மூலிகை மருந்து தயாரிப்பவர் என்று கூறிய அந்த நபர், வாடகைக்கு வருவதற்கு முன்னதாக, ரூ.1000ஐ செல்லப்பிள்ளையிடம் முன்பணமாகவும் கொடுத்துள்ளார்.

பின்னர், கடந்த திங்கட்கிழமையன்று மீண்டும் அந்த ஜோடி அங்கு வந்து அவர்களிடம் உரையாடியுள்ளனர். அப்போது, வீட்டு உரிமையாளர்களான செல்லப்பிள்ளையும், சகுந்தலாவும் தங்களுக்கு மூட்டு வலி இருப்பது குறித்து, அந்தத் தம்பதியிடம் தெரிவித்துள்ளனர்.

உடனே அந்த ஜோடி, தங்களிடம் ஒரு மூலிகை மருந்து இருப்பதாக கூறி வீட்டு உரிமையாளர்களிடம் கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட அவர்கள் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த ஜோடி, சகுந்தலாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையைத் திருடிச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது, சகுந்தலா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது கணவர் செல்லப்பிள்ளை உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி