ஆப்நகரம்

இணையம் மூலம் பி.எப் பணத்தை பெறும் சேவை அறிமுகம்

இணையம் மூலம் பிஎப் பணத்தை பெறும் சேவையை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அளிக்க இருக்கிறது.

TNN 21 Feb 2017, 3:43 pm
இணையம் மூலம் பிஎப் பணத்தை பெறும் சேவையை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அளிக்க இருக்கிறது.
Samayam Tamil epfo launch online pf withdraw facility
இணையம் மூலம் பி.எப் பணத்தை பெறும் சேவை அறிமுகம்


இந்த சேவையை பெறுவது கடினமான ஒன்று என்றாலும், வேகமாக பிஎப் பெறும் முறைகளை பின்பற்ற முடியும் என்று கூறப்படுகிறது. இதற்காக கிளை அலுவலங்களை சர்வரில் இணைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இது முடிந்தவுடன், இணையம் மூலமாக பிஎப் கோரிக்கை விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் அதனை பயன்படுத்தி எளிதாக பணத்தை திரும்ப பெற இயலும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது.

பிஎப் அலுவலங்கங்களில் பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் பெறும்போது குறைந்தது 20 நாட்களுக்குள் வரை நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே 50 அலுவலங்கள் பைலட் திட்டம் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 123 அலுவலகங்களை மத்திய சர்வருடன் இணைக்க வருங்கால வைப்பு நிதி ஆணையம் முடிவு செய்துள்ளது.

பிஎப் கணக்குகளுக்கு ஆதார் எண்ணை வருங்கால வைப்பு நிதி அமைப்பு அவசியமாக்கியுள்ளது. இதற்காக அனைவரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை பி.எப் கணக்குடன் இணைக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து வங்கி கணக்குகளிலும் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். அப்படியிருந்தால் பணத்தை எளிதாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் 5 வருடம் பணி புரிந்த பிறகு பி.எப் பணத்திற்கு எந்த வரியும் கிடையாது. 5 வருடத்திற்குள் பணத்தை திரும்ப பெறும் போது பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் 30 சதவீதம் வரை டிடிஎஸ் செலுத்த வேண்டி வரும்.

அடுத்த செய்தி