ஆப்நகரம்

இன்று ஃபேஸ்புக் நிறுவனர் #MarkZuckerberg பிறந்தநாள்!

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

TNN 14 May 2017, 3:11 pm
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
Samayam Tamil facebook founder mark zuckerberg celebrates birthday
இன்று ஃபேஸ்புக் நிறுவனர் #MarkZuckerberg பிறந்தநாள்!


ஃபேஸ்புக் என்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்பை உலகுக்கே வழங்கி, உலகமே வெறும் லைக், ஷேர், கமெண்ட் என்பதற்குள் அடக்கியவர் மார்க் ஸூக்கர்பெர்க். கடந்த 1984ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி அமெரிக்காவில் உள்ள ஒயிட் பிளெய்ன்ஸ் என்ற பகுதியில் பிறந்தவர் மார்க்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது, ஃபேஸ்புக் வலைதளத்தை வடிவமைத்தார். அவரே அப்போது நினைத்து பார்த்திருக்க மாட்டார், ஃபேஸ்புக் எதிர்காலத்தில் உலகை ஆளப்போகும் சமூக ஊடகம் என்று…

இன்றைக்கு, உலகின் 200 கோடி மக்கள் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். உலக இயக்கத்தில், அரசியல் தொடங்கி, பொழுதுபோக்கு வரை பலவிதங்களில் பங்களிப்பை வழங்கிவரும் இணையதளமாக ஃபேஸ்புக் மாறியுள்ளது.

தற்போதைய நிலையில், மார்க் ஸூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 58.6 பில்லியன் டாலர்கள். அவர் உலக மக்களுக்குச் சொல்வதெல்லாம், ‘’கடின உழைப்பு மட்டுமின்றி, ஸ்மார்ட்டாகச் செயல்படுவதும்தான் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்,’’ என்பதுதான்…

#HappyBirthdayMarkZuckerberg #SamayamTamil

அடுத்த செய்தி