ஆப்நகரம்

சொந்த மகளை கொலை செய்து, பேஸ்புக் லைவில் ஒளிபரப்பிய கொடூரன்..!

பிறந்து 11 மாதமே ஆன சொந்த மகளை கொலை செய்தது மட்டுமல்லாமல், அந்த காட்சிகளை பேஸ்புக் லைவ்வில் ஒளிபரப்பு செய்துள்ளான் தாய்லாந்தைச் சேர்ந்த கொடூரத் தந்தை ஒருவன்.

TNN 26 Apr 2017, 12:43 pm
பிறந்து 11 மாதமே ஆன சொந்த மகளை கொலை செய்தது மட்டுமல்லாமல், அந்த காட்சிகளை பேஸ்புக் லைவ்வில் ஒளிபரப்பு செய்துள்ளான் தாய்லாந்தைச் சேர்ந்த கொடூரத் தந்தை ஒருவன்.
Samayam Tamil father murdered daughter and telecast it in facebook live
சொந்த மகளை கொலை செய்து, பேஸ்புக் லைவில் ஒளிபரப்பிய கொடூரன்..!


தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வுட்டிசன் என்ற 20 வயது இளைஞருக்கு திருமணமாகி, கடந்த ஆண்டு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. சமீபத்தில் வுட்டிசனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அவரது மனைவி பிரிந்து சென்றார். அந்த தம்பதியினரின் 11 மாத பெண் குழந்தை வுட்டிசனின் பராமரிப்பில் வளர்ந்து வந்தது.

மனைவி பிரிந்து சென்றதிலிருந்து வுட்டிசன் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் தாய்லாந்தின் முக்கிய சுற்றுலாத்தளமான புக்கெட் தீவிற்கு தனது மகளுடன் சென்ற வுட்டிசன், அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று 11 மாத பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல், தனது மகளை வுட்டிசன் கொலை செய்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்த கொடூர செயலை, பேஸ்புக் லைவ் மூலமாக ஒளிபரப்பும் செய்துள்ளார். இந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த வுட்டிசனின் உறவினர்களும், நண்பர்களும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் மிகத் தாமதமாகவே, காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தை கண்டறிந்துள்ளனர்.

காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது கொலை செய்யப்பட்ட தனது மகளின் உடல் அருகே, வுட்டிசனும் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தார். வுட்டிசன் ஒளிபரப்பு செய்த கொலை காட்சிகளை, 24 மணி நேரத்திற்கு பிறகே பேஸ்புக் நீக்கியுள்ளது. அதற்குள் இந்த வீடியோ காட்சிகளை சுமார் 3 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். மேலும் சிலர் இந்த காட்சிகளை யு டியூபிலும் பதிவேற்றியுள்ளனர்.

தனது வேலையில் மிகவும் அஜாக்ரதையாக இருந்ததற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பேஸ்புக் லைவ் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, சமீபகாலமாக இது போன்ற கொடூர வன்முறை காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Father murdered daughter and telecast it in facebook live

அடுத்த செய்தி