ஆப்நகரம்

குர்காவனில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது

குர்காவனில் சொந்த மகளை கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் தரிக்க வைத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

TOI Contributor 28 Apr 2016, 3:07 pm
குர்காவனில் சொந்த மகளை கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் தரிக்க வைத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil father rapes child gets her pregnant
குர்காவனில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது


குர்காவனைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு இவருடன் சேர்த்து 3 மகள்கள் மற்றும் 2 வயதில் ஒரு மகன் உள்ளனர். தந்தை இரவு வேலைக்கு சென்றுவிட்டு காலை வீட்டுக்கு வருவார். மனைவி காலையில் வேலைக்கு சென்று விடுவார். பாதிக்கப்பட்ட பெண்ணின் இரு தங்கைகள் பள்ளிக்கு சென்று விடுவார்கள். 2 வயது தம்பிக்கு எதுவும் தெரியாது.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி கடந்த ஓராண்டுக்கு முன்பு 12 வயதான தனது சொந்த மகளையே மிரட்டி தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து கடந்த ஓராண்டாக இதேபோல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் தந்தை. நேற்று அந்தப் பெண் வயிறு வலிக்கிறது என்று கூற மருத்துவரிடம் தாய் அழைத்துச் சென்றார். மருத்துவர் சோதித்ததில் அந்தப் பெண் கர்ப்பம் தரித்து 5 மாதங்கள் ஆனது தெரிய வந்தது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார், போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணினின் 38 வயது தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

அடுத்த செய்தி