ஆப்நகரம்

கர்நாடகாவில் முதல் தோல் வங்கி

கர்நாடகா மாநிலத்தில் முதல் தோல் வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

TNN 30 Mar 2016, 6:26 pm
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் முதல் தோல் வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil first skin bank in karnataka
கர்நாடகாவில் முதல் தோல் வங்கி


கர்நாடக மாநிலத்தில் முதல் தோல் வங்கியை விக்டோரியா மருத்துவமனையில், மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் ஷரண் பிரகாஷ் பட்டீல் திறந்து வைத்தார்.

பிணவறைகளில் இருந்து தோல் எடுக்கப்பட்டு தோல் வங்கிகளில் சேமிக்கப்படும். பிளாஸ்டிக் சர்ஜரிகளுக்கும், விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்தத் தோல் பயன்படும்.

செயற்கைத் தோல் அல்லது தோல் வங்கி மூலம் எடுக்கப்பட்ட தோலைக் கொண்டு, காயமடைந்த உடல் பகுதிகளைக் குணப்படுத்தலாம். நோயாளியின் உடலில் சுமார் மூன்று வாரங்களுக்கு இருக்கும் இந்தத் தோல், சுருக்கம் அடைந்த பின்னர் அகற்றப்படும் என விக்டோரியா மருத்துவமனையின் தலைவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி