ஆப்நகரம்

தோழிக்கு ஏற்பட்ட சங்கடத்தால் இளைஞர் உருவாக்கிய கருவி!

சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் அமம் அருண் ரூ.499க்கு டூவிலரில் சார்ஜ் செய்யும் ‘பவர் எய்ட்’ (Power Aid) என்ற கருவியை உருவாக்கியுள்ளார். தற்போது இந்தக் கருவி அமேசான் இணையதளத்தில் விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

TNN 28 Sep 2017, 2:52 pm
சென்னை: சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் அமம் அருண் ரூ.499க்கு டூவிலரில் சார்ஜ் செய்யும் ‘பவர் எய்ட்’ (Power Aid) என்ற கருவியை உருவாக்கியுள்ளார். தற்போது இந்தக் கருவி அமேசான் இணையதளத்தில் விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil former srm university student amam arun has created a new gadget that enables the user to charge mobile
தோழிக்கு ஏற்பட்ட சங்கடத்தால் இளைஞர் உருவாக்கிய கருவி!


இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் இல்லாதவர்கள் எவரும் இல்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். என்னதான் செல்போனில் எல்லா வசதிகளும் இருந்தாலும், நீண்ட தூரம் பயணம் செய்யும்போதோ அல்லது இன்டர்நெட்டைப் பயன்படுத்தும்போதோ பேட்டரி குறைவது வழக்கம். இது பலநேரங்களில் அனைவரையும் வெறுப்படையச் செய்யும்.

இதுபோன்ற ஒரு சூழல் அமம் அருணின் தோழிக்கும் ஏற்பட்டது. அவரது தோழி ஒருநாள் வீட்டிற்குத் திரும்ப காலதாமதமாகிவிட்டது. போனில் பேட்டரி குறைந்து ஸ்விட்ச் ஆப் ஆனதால், அவரது பெற்றோருக்கு இதைத் தெரிவிக்க முடியவில்லை. இதனால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க புறப்பட்டு விட்டனராம்.

குழந்தைகள் வெளியில் உள்ளபோது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க முடியாத இந்த சூழல் அருணைப் பாதித்துள்ளது. இதில் ஊக்கம் பெற்ற அருண், 8 மாத ஆய்விற்குப் பின் டூவிலரிலிருந்து சார்ஜ் செய்யும் கருவியை உருவாக்கியுள்ளார்.

இந்தக் கருவி எல்லா வகையான டூவிலரிலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் இரு மொபைலை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யும் வசதி, வாட்டர் புரூப் வசதி, டஸ்ட் புரூப் வசதி போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.

Former SRM University student Amam Arun has created a new gadget that enables the user to charge mobile from twowheelers.

அடுத்த செய்தி