ஆப்நகரம்

மின்சார ரயிலில் ஒரு ரூபாய் டாக்டர் பிரசவம்; அழகிய பெண் குழந்தை பெற்ற பெண்!

தாதர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

TNN 12 Oct 2017, 12:42 am
மும்பை: தாதர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.
Samayam Tamil girl baby born in dadar local train
மின்சார ரயிலில் ஒரு ரூபாய் டாக்டர் பிரசவம்; அழகிய பெண் குழந்தை பெற்ற பெண்!


மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி நோக்கி இரவு 10.15 மணியளவில் மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. அதில் நிறைமாத கர்ப்பிணியான சல்மா சேக்(26) பயணம் செய்தார்.

இந்நிலையில் ரயில் மாட்டுங்காவை கடந்து செல்கையில், திடீரென அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வலியால் துடித்துள்ளார். ரயில் தாதர் ரயில் நிலையம் வந்தவுடன், உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தாதர் ரயில் நிலையத்தில் செயல்படும் ஒரு ரூபாய் கிளினிக்கில் இருந்த டாக்டர், விரைந்து வந்தார். ரயிலிலேயே சல்மாவிற்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

உடனடியாக தாயும், சேயும் பரேல் கே.இ.எம் மாநகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Girl baby born in Dadar local train.

அடுத்த செய்தி