ஆப்நகரம்

நீ சரியாக சீவவில்லை... மாணவிக்கு 200 உக்கி போடவைத்ததால் உடல்நிலை பாதிப்பு

5ம் வகுப்பு படிக்கும் மாணவி சரியாக சீவிவராததால் அவருக்கு 200 உக்கி போடச்சொல்லி ஆசிரியர் தண்டனை வழங்கினார். இதனால் அந்த சிறுமி நடக்கமுடியாமல் அவதிப்பட்டு வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 13 Jun 2017, 1:08 pm
அகமதாபாத் : 5ம் வகுப்பு படிக்கும் மாணவி சரியாக சீவிவராததால் அவருக்கு 200 உக்கி போடச்சொல்லி ஆசிரியர் தண்டனை வழங்கினார். இதனால் அந்த சிறுமி நடக்கமுடியாமல் அவதிப்பட்டு வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil girl made to do 200 sit ups for unbraided hair
நீ சரியாக சீவவில்லை... மாணவிக்கு 200 உக்கி போடவைத்ததால் உடல்நிலை பாதிப்பு


ஹனி பிரஜாபதி (10), மணி நகரில் உள்ள லலிதா கிரீன் லான்ஸ் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகின்றார். சில நாட்களுக்கு முன் ஹனி பள்ளி விதிமுறைப்படி பின்னப்பட்ட இரட்டை சடை போட்டு செல்லவில்லை என கூறப்படுகின்றது. இதை கண்டித்த பள்ளி ஆசிரியர், அந்த சிறுமிக்கு 200 உக்கி போட சொல்லி தண்டனை கொடுத்துள்ளார்.

ஹனியின் தந்தை பிரவின் பிரஜாபதியின் புகார்:
என் மகள் ஹனி சில நாட்களுக்கு முன் இரட்டை சடை போட்டு செல்ல வில்லை என்பதால் 200 உக்கி போடச்சொல்லி தண்டனை அளித்துள்ளனர். சிறு பெண்ணுக்கு இப்படி தண்டனை கொடுத்ததால், என் மகளின் கால்கள் வீங்கி நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றாள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட பள்ளி கல்வித்துறை ஆய்வாளருக்கு மனு அளித்துள்ளார்.



பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் நவனீத் மேதா கூறும்போது, “சிறுமிக்கு தண்டனை கொடுத்த விவகாரத்தில் சிசிடிவி விடியோ காட்சி ஆதாரம் உள்ளது. இந்த குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள்.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி