ஆப்நகரம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : எம்.எல்.ஏ கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மேகாலயா எம்.எல்.ஏ வை போலீசார் கைது செய்துள்ளனர்.

TOI Contributor 7 Jan 2017, 9:08 pm
மேகாலயா : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மேகாலயா எம்.எல்.ஏ வை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil girl raped mla arrested
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : எம்.எல்.ஏ கைது



மேகாலயா மாநிலத்தில் எம்.எல்.ஏவாக இருப்பவர் ஜூலியஸ் கே டோர்பாங் . இவர் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது . இதனையடுத்து அம்மாநில சிறார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் சார்பில் ஜூலியஸ் கே டோர்பாங் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.வழக்கு விசாராணையின் போது, ஜூலியஸ் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால், அவருக்‍கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்தது.

இந்தநிலையில் ஜூலியஸ் கே டோர்பாங் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவரை கைஅஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் போலீசார் கைது செய்தனர்.இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி