ஆப்நகரம்

3 வயதில் சிறுமிக்குத் திருமணம்- 17 வயதில் நிராகரித்த நீதிமன்றம்!

ஜோத்பூரில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் மகள் 3 வயதாக இருக்கும்போது அவளுக்கும் 11 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்தனர். இப்போது 14 வருடங்கள் கழித்து ஜோத்பூர் நீதிமன்றம் அதை செல்லாது என்று கூறி தீர்ப்பளித்துள்ளது

TNN 24 Nov 2017, 6:40 pm
ஜோத்பூர்: ஜோத்பூரில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் மகள் 3 வயதாக இருக்கும்போது அவளுக்கும் 11 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்தனர். இப்போது 14 வருடங்கள் கழித்து ஜோத்பூர் நீதிமன்றம் அதை செல்லாது என்று கூறி தீர்ப்பளித்துள்ளது.
Samayam Tamil girl who got married at the age of 3 has been freed from the marriage at 17
3 வயதில் சிறுமிக்குத் திருமணம்- 17 வயதில் நிராகரித்த நீதிமன்றம்!


ஜோத்பூரில் உள்ள கடந்த 2003 ஆம் ஆண்டு 3 வயது சிறுமிக்கு கட்டாய குழந்தைத் திருமணம் செய்யப்பட்டது. அதன்பின் அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்ததால் சிறுமியை, சிறுவனின் வீட்டில் விடுமாறு சிறுவனின் வீட்டார் வற்புறுத்தி வந்தனர். மேலும், சிறுமியின் பள்ளிப் படிப்பையும் பாதியிலேயே இடைநிறுத்தினர்.

இந்நிலையில், 14 ஆண்டுகள் கழித்து, தன்னார்வ அமைப்பின் உதவியுடன் நிதிமன்றத்தில் திருமணத்தை ரத்துசெய்யக்கோரி வழக்குத் தொடர்ந்தார். இருதரப்பையும் அழைத்து பேசிய நீதிமன்றம் இருவரையும் பரஸ்பரமாக பிரித்து வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி